கோக்கால் கோத்தகிரி பள்ளியில் தேசிய கல்வி நாள் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 November 2024

கோக்கால் கோத்தகிரி பள்ளியில் தேசிய கல்வி நாள் .

 


கோக்கால் கோத்தகிரி பள்ளியில் தேசிய கல்வி நாள் .


உதகை அருகே உள்ள சோலூர் (கோக்கால் - கோத்தகிரி) அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய கல்வி நாள் தினம்அனுசரிக்கப்பட்டது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு கல்வி உரிமைகளில் - நுகர்வோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். 


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ராஜா, நுகர்வோர் மைய நிர்வாகிகள் பிரேம், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறிய கருத்துக்கள்.....


கல்வி மனிதனை உயர்வுக்கு வழி வகுக்கும். அதனை திறம்பட கற்க வேண்டும். தற்போதைய உலகம் போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மாணவர்கள் கற்பதை முழு அக்கறை கொள்ள வேண்டும். மாணவ பருவத்தில் கல்வியை புரிந்து படிக்க வேண்டும். உயர்கல்வி படிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப துறை,  செவிலியர் குழுமம், உள்ளிட்டவையில்  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை சேர்ந்து படிப்பது மூலம் உயர் கல்வி வேலை வாய்ப்புக்கு எளிதாக செல்ல முடியும். இல்லாவிட்டால் பணவிரயமும், பாதிப்பும் ஏற்படும் என்றார்.

 

நிகழ்ச்சியில் மணிகண்டன், ராஜ்குமார், ராஜேஷ்குமார்,  சாந்தி, ஈஸ்வரி, இமாக்குலேட் அனிதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad