கோத்தகிரி -விஷ்வ சாந்தி பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி விஷ்வ சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, ணமாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றத்தை மீட்டு எடுத்தல் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் அடிப்படையில் விஷ்வ சாந்தி பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு. சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு.கே .ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள்.....
இன்றைய காலகட்டத்தில் உலகை ஆண்டு வரும் முதலாளித்துவ உற்பத்தி முறை இயற்கையை அழிக்கும் தன்மை கொண்டது. ஒருபுறம் செல்வங்கள் குவிந்து வருவதும் மற்றொருபுறம் துயரங்கள் மலை போல் வளர்ந்து வருவதும் நவீன பொருளாதாரக் கொள்கையினுடைய விளைவு ஆகும். இதன் பாதிப்பே காலநிலை மாற்றம் ஆகும். அனைத்து நாடுகளுமே பல ட்ரில்லியன் பொருளாதார மேம்பாடு என்ற கொள்கையை மேற்கொண்டுள்ளனர். இயற்கையை சுரண்டாமல் இத்தகைய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. இந்த உலகம் காந்தியடிகள் கூறிய உலக மக்கள் அனைவருக்கும் ஆன வளம் இங்கு உள்ளது ஆனால் தனி ஒரு மனிதனின் பேராசைக்கு இந்த ஒரு பூமி போதாது என்ற கருத்தினை விரைவில் உலக மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்வர். அமெரிக்கர்களைப் போலவே ஆடம்பரமாக வாழ நினைத்தால் நமக்கு ஒரு பூமி போதாது. ஒன்பது பூமிகள் வேண்டும். அப்துல் கலாம் அவர்கள் கூறியதைப் போல இந்த பூமியை காக்க நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையான மாணவச் செல்வங்கள் தான் இந்த பூமியை காப்பாற்ற முடியும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகளும் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment