தேசிய மாணவர் படை தின விழா.
நீலகிரி மாவட்ட என்.சி.சி. கமாண்டர் கர்னல் சந்தோஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி என். சி. சி.மாணவர்கள் சார்பில் தேசிய மாணவர் படை தின விழாகொண்டாடப்பட்டது. கப்பத்தொரை முதியோர் இல்லத்திற்கு சென்று இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்தனர். மேலும் அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருட்களையும் தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், பவுடர், டூத் பேஸ்ட் போன்ற பொருள்களையும் வழங்கி மகிழ்ந்தனர் . இந்நிகழ்ச்சியில் என். சி.சி.அலுவலர் காமராஜ் இராணுவ அதிகாரி தேவெந்தர் சிங் ஆசிரியர்கள் ராஜன் சத்தியசீலன் மற்றும் என். சி. சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment