அபாய நிலையில் அரவேனு டாஸ்மாக் பொதுமக்கள் வேதனையுடன் புலம்பல்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ளது அரவேனு பஜார் பகுதி ஏற்கனவே நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. சுற்றுவட்டார மக்களின் அத்தியாவசிய தேவைகளான கூட்டுறவு பண்டக சாலை, வங்கிகள், கோ-ஆப்டெக்ஸ், மளிகை காய்கறிகள் அசைவ உணவு பொருட்கள் கடைகள், பஞ்சாயத்து வணிக வளாகம், தபால் நிலையம், பஸ் நிறுத்தம் மற்றும் டேக்சி ஸ்டேண்ட் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளுக்கான இடமாக நெரிசல் மிகுந்த அரவேனு பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நூற்றாண்டை கடந்த பழைய சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கிவரும் மதுக்கடை அசம்பாவிதத்தில் பல சேதங்களை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது. ஊழியர்களே அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு மது வாங்கச் செல்லும் வாகன ஓட்டிகளால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அதை சீர்செய்வது காவலர்களுக்கு சவாலான பணியாக உள்ளது. மேலும் மதுப்பிரியர்கள் உபயோகித்துவிட்டு கழிவு பொருட்களை கூட்டுறவு பண்டக சாலை படிக்கட்டுகளில் வீசிச்செல்வதால் பெண்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரவேனு டாஸ்மாக் கடையை ஒதுக்குப்புறத்திற்க்கு மாற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திதரவேண்டும் என்பது அரவேனு சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையாகும். பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் புலம்பிவருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நலம் விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment