நீலகிரி மாவட்டம், கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை இன்று (23.11.2024) தலைமை கொராடா திரு இளித்துறை கா ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பணிக்கு தேர்வான நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.காசிநாதன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) கோவை திருமதி.ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.சாகுல் ஹமீது மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment