வீடு வீடாக சென்று வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்.
காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட வன அலுவலர்கௌதம் அவர்கள் அறிவுரைப்படி கீழ் கோத்தகிரி வனச்சரகர் ஷியாம் பிரகாஷ் அவர்கள் 500 மரக்கன்றுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இயக்குனருமான கே. ஜே. ராஜு அவர்களிடம் வழங்கினார்.இந்த மரக்கன்றுகள் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா நடுஹட்டி, கேர்பெட்டா ஒசாட்டி, கடைக்கம்பட்டி, திம்பட்டி மற்றும் கடக்கோடு ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. வீட்டுக்கு ஒரு மரம் என்ற இந்தத் திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம தலைவர்களும் பொதுமக்களும் மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டனர். மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதியளித்தனர். கேர்பெட்டா ஊர் தலைவர் காரி கவுடர், கிருஷ்ணன், கேர்பெட்டா ஓசாட்டி ஊர் தலைவர் லட்சுமணன், கடைக்கம்பட்டி மற்றும் எட்டு ஊர் தலைவர் ஹாலாகவுடர், திம்பட்டி ஊர் பிரமுகர் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாகியுமான ராமதாஸ் மற்றும் கடக்கோடு ஊர் தலைவர் லட்சுமணன் ஆகியோர் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு நன்றி கூறினார்கள். பிரபல தொழிலதிபர் போஜராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே. ராஜு மற்றும் மரம் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment