கோத்தகிரி கன்னேரிமுக்கு குடியிருப்புகள் அருகே குப்பைகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 November 2024

கோத்தகிரி கன்னேரிமுக்கு குடியிருப்புகள் அருகே குப்பைகள்.


கோத்தகிரி கன்னேரிமுக்கு குடியிருப்புகள் அருகே குப்பைகள்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹட்டியில் குடியிருப்புகள் அருகே குப்பைகள் தேங்கி இருப்பதால்  மழைக்காலத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


கன்னேரிமுக்கை தாண்டி பல ஊர்கள் உள்ளன மிக பரபரப்பான சாலையில் குப்பைகளை சேகரிக்க கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டது அதில் பல காட்டேஜ்களை சேர்ந்தவர்கள் கார்களில் வந்து குப்பைகளையும் மாமிச கழிவுகளையும் கொட்டிச்சென்றதால் துர்நாற்றம் வீசியது நோய்பரவும் என பொதுமக்கள் ஆட்சேபனை செய்ததால் குப்பைத்தொட்டி அங்கிருந்து அகற்றப்பட்டது. கோத்தகிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடியாக வீடுகளுக்கே வந்து குப்பைகளை சேகரித்து செல்வதால் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதில்லை காட்டேஜ் காரர்கள் போகிர போக்கில் கார்களில் வந்து கன்னேரிமுக்கு சாலையோரத்தில் குப்பைகளையும் மாமிச கழிவுகளையும் வீசிவிட்டு செல்வதால் குரங்குகள் அவற்றை எடுத்துவந்து வீட்டின் மேல் அமர்ந்து கொண்டு வீசி அலங்கோல படுத்துகிறது. இந்த குப்பைகளால் நோய்பரவும் அபாயம் உள்ளதால் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன் காரில் வந்து வீசிச்செல்லும் தனியார் காட்டேஜ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உலக சுற்றுலா வரைபடத்தில் உள்ள சுற்றுலா தலமான கன்னேரிமுக்கு பகுதியை தூய்மையாக கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad