உல்லத்தி ஹட்டி மக்கள் மீண்டும் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்டம் முன்னெடுத்த ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற உல்லத்தி ஹட்டி மக்கள் கோவையைச் சேர்ந்த பசுமை பறவைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மீண்டும் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை ணபுரிந்துள்ளனர். கிராம மக்கள் நகர மக்களை விட இயற்கைக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுவார்கள். அதனை உல்லத்தி ஹட்டி மக்கள் நிரூபித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஊர் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு . குண்டன் அவர்கள் இதுபோன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை தொடர்வோம் என்று கூறினார். பசுமை பறவைகள் அமைப்பின் நிர்வாகி திரு. செல்வராஜ் அவர்கள் பேசும்போது நீலகிரி வளமாக இருந்தால் தான் சமவெளிப் பகுதிகளும் வளமாக இருக்கும். எங்களுக்காக நீலகிரியில் மரம் நடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு. கே.ஜே. ராஜு அவர்கள் பேசும்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்லுயிர் சூழல் பெருமளவில் அழியும். மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய லேன்டானம் கேமரா எனப்படும் உண்ணிச்செடி, பார்த்தீனியம் வெட்டுக்கிளி, எலிகள், வைரஸ்கள் போன்றவை பல்கி பெருகும். இது குறித்து ஒரு விஞ்ஞானி கூறும் போது இன்னும் ஐந்து ஆறு தலைமுறைகளில் பூமி முழுவதும் இது போன்ற களை செடிகள் தான் இருக்கும் என கூறுகிறார். தற்போது காற்று மாசு பெருமளவில் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை டெல்லியில் உள்ள பள்ளி குழந்தைகளில் 30 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயாளிகளாக இருக்கிறார்கள் எனக் கூறுகிறது. பிரபல சினிமா நடிகை மீனா அவர்களின் கணவர் இறப்பிற்கு அந்தப் பகுதியில் மிகுதியாக இருந்த புறாக்களின் எச்சங்கள் தான் காரணம் என மருத்துவர்கள் கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தின் பிற கிராமங்களுக்கு உதாரணமாக திகழும் உல்லத்தியைப் போன்று மற்ற கிராம மக்களிடமும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment