நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேவாலை போலீசார் வாகன தனிக்கையின் போது வெடி மருந்துடன் வந்தவரை கையும் கலவுமாக பிடிபட்டார்,
தேவாலை பகுதியில் உள்ள வாளவயல் பகுதியில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, அதனைத் தொடர்ந்து தேவாலை போலீசார் வாழவயல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வாழவயல் பகுதியில் வசித்துவரும் வரதராஜ் என்பவர் கையில் ஒரு பையுடன் வந்துள்ளார், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்து விசாரித்ததில், இவர் முன்னுக்குப் பின்பு முரண்பாடாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே வரதராஜ் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் வெடிமருந்து பதுக்கிக் கொண்டு வந்தது தெரிய வந்தது,
அப்போது வரதராஜன் வெடி மருந்துடன் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை தேவாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் வரதராஜ் வாழவயல் பகுதியில் ஒரு கிணறு வேலை செய்து வருவதாகவும் அந்த கிணறு வேலைக்கு வெடி மருந்தை எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார், பின்பு போலீசார் அவர் வைத்திருந்த பையை முழுமையாக சோதனை செய்தபோது அதில் வடிமருந்துக்கு பயன்படுத்தும் 24 டெட்னேட்டர் துண்டுகளும்..6 ஜெலட்டின் ஜெலட்டின் குச்சிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், வழக்குப்பதிவு செய்து வரதராஜன் இந்த வெடி மருந்து பொருட்களை எங்கிருந்து கொண்டு வருகிறார் ஏன் கொண்டு வருகிறார் இவருக்கு யார் வெடிமருந்து சப்ளை செய்வது போன்ற கோணத்தில் தேவாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment