பத்து மாத குழந்தை உயிர் இழப்பு காரணம் தடுப்பூ ஊசியா??
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிக்கு உட்பட்ட குண்டாட பிரிவு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் (ஜஸ்வந்த் மற்றும் ஜெஸ்வின்).... இவர்களின் இரண்டாவது மகனான ஜெஸ்வின் பிறந்து பத்து மாதங்கள் ஆன நிலையில் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனையில் அழைத்திருந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கட்டப்பட்டு தொகழட்டி மருத்துவமனைக்கு தாயார் கலைச்செல்வி தனது இரண்டாவது மகனை அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் பணிபுறியும் செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய உடன் தாயார் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பிறகு அந்த குழந்தைக்கு 4 மணி அளவில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளது பிறகு 4.30. மணிக்கு குழந்தையின் பெற்றோர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவர்கள் அங்கிருந்து 5.15 மணியளவில் ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்... பின்பு ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தவுடன் ஊட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் குழந்தை முன்பே இறந்து விட்டது என்று கூறியவுடன் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு முன் குழந்தைக்கு எந்தவித நோய் நொடிகள் எதுவும் இல்லை குழந்தை ஆரோக்கியமாக தான் இருந்திருக்கிறது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.இந்த குழந்தையின் இறப்பு செவிலியர் செலுத்திய தடுப்பூசியின் காரணமா இல்லை மற்ற காரணமா என்று பெற்றோர்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்... இந்த குழந்தையின் இறப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment