நீலகிரி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சிதலைவர் தொடங்கி வைத்தார்:
நடுநீலகிரி மாவட்டம் கூடலூர் தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தேசிய தொல்குடி நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (15-11-2024) தொடங்கி வைத்தார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இன்று பழங்குடியினர் தேசிய தொல்குடி நாளை முன்னிட்டு முன்னிட்டு பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் வகைகளை குறித்தும், அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகின்றதா என்பதை குறித்தும், சமையிற் கூடத்தில் பொருட்களின் இருப்புகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகளின் smart class room மூலம் கற்றுத்தரும் பாடங்களின் செயல்பாடுகளை குறித்தும் மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment