முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்வு.
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் செய்ய 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் ரத்து ஆவனம் 50 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் இப்படியாக ரூபாய் 50 முதல் 80 வரையிலான பழைய முத்திரைத்தாள் கட்டணம் ரூபாய் 1000 வரை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவருக்கு பவர் பத்திரம் சந்தை மதிப்பில் 1 சதவீதம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத சொத்து பிரிவினை மார்கெட் மதிப்பில் அந்த பங்கிற்க்கான 4 சதவீதம் என முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment