ஊட்டி: நீலகிரி மாவட்ட அளவிலான இஸ்லாமிய கலை இலக்கிய விழா 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பேச்சு போட்டி ஆங்கிலம் தமிழ் உருது, படம் வரைதல்,கட்டுரை போட்டி, கவிதை போட்டி,கையெழுத்து போட்டி, பாடல் போட்டி,குழு பாடல் போட்டி, கேள்வி பதில் போட்டிகள் என 70-க்கும் மேற்பட்ட போட்டிகள் sub junior, junior, senior, super senior, general என வயது அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் 17 இடங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் ஒவ்வொரு போட்டிகளிலும் முதலிடம் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
SSF எனும் மாணவர் அமைப்பின் மூலம் இப்போட்டிகள் கிளை அளவில் நடத்தப்பட்டு அதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற்றுள்ளார்கள் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த வெற்றியாளர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் இப்போட்டிகள் அனைத்தும் இந்திய அளவு வரை நடைபெறும் மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கலைத்திறன்களை மேம்படுத்துவதற்காக வேண்டியும் அவர்களின் கல்வி வளர்ச்சி பெறுவதற்காக வேண்டியும் வழிவகை செய்து தருகின்றது SSF எனும் இவ்வமைப்பு. எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக சிறந்த திறமையாளர்களாக உருவாக்குவதற்கு முன்னோடியாக திகழும் இவ் அமைப்பில் இந்திய அளவில் இஸ்லாமிய இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றார்கள். இன்று காலை 9 மணி அளவில் துவக்க விழாவுடன் இப்போட்டிகள் ஆரம்பமாகி இரவு 8 மணி அளவில் பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது.
வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுவட்டாரங்கள் இருக்கக்கூடிய பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர் SSF மாவட்டத்தின் தலைவர் - மௌலானா சஃப்வான் அமானி,பொதுச் செயலாளர் -முஸ்தபா எமரால்டு' பொருளாளர்- அசாருதீன் தலைக்குந்தா, கலை இலக்கியச் செயலாளர்-பைசல் ஸகாபி மற்றும் விழா குழுவினர்கள் SSF நீலகிரி மாவட்ட அளவிலான இஸ்லாமிய கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் TMJ-SSF செயல் வீரர்களுக்கும் SJM உலமா பெருமக்களுக்கும் (ம) ஒத்துழைப்பை தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment