நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஆங்கில காய்கறிகளில் கேரட் பிரசித்தி பெற்றது. நீலகிரி மண் வளம் அதற்கு மணிமகுடம் சூடுவது போல் நல்ல நிறம் மற்றும் திடத்துடன் விளைகிறது. மருத்துவ குணம் அதிகமாக நிறைந்து காணப்படுவதால் என்றுமே நீலகிரி கேரட்டிற்க்கு அதிக தேவை உள்ளது பொதுமக்கள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.
தற்போது மழை பொழிவு இருந்து வருவதால் ஒரு விவசாயி தனது கேரட் தோட்டத்தை பச்சை பசேலென பராமரித்து இருக்கும் காட்சி பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகும். நீலகிரி விவசாயிகள் அதிக சிரமப்பட்டு கேரட் விளைவிக்கின்றனர்.விஞ்ஞான ஊழல் செய்து மருத்துவ குணம் கொண்ட நீலகிரி கேரட் உடன் டில்லி கேரட் கலப்படம் செய்து நீலகிரி விவசாயிகளை வஞ்சித்த சில புல்லுருவி இடைதரகர்களை நீலகிரி விவசாயிகள் நல சங்த்தின் தலைவர் இளித்துரை திரு. N. விஸ்வநாதன் அவர்கள் மற்ற சங்கங்களையும் ஒன்றினைத்து கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தோட்டக்கலைத்துறை உதவியுடனும் அதிக சிரமப்பட்டு புல்லுருவி இடைதரகர்களை விரட்டியதால் தற்போது மக்களுக்கு மருத்துவகுணம் கொண்ட நீலகிரி கேரட் கிடைத்துவருகிறது அதனால் சற்றே விலை உயர்ந்து விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுப்படியாகும் விலை கிடைத்து வருகிறது. இந்த பசுமை விவசாயிகள் வாழ்வில் நிலைக்க உதவிபுரிவோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment