குன்னூர் , மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உதகை , குன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற வாகனங்களும் அங்கிருந்து உதகைக்கு வந்த வாகனங்களும் அதிகமாக இருந்தது . அதனால் இன்று பகல் முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் நிலவியது . மாலை 5.45 மணியளவில் குறும்பர் பாடியிலிருந்து பர்லியாறு வரை 2 கிமீ தூரம் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது . அதைதொடர்ந்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள் . ஒரு ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரடைந்தது . அந்த பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் போலீசார் மழையில் நனைந்து கொண்டே போக்குவரத்து ஒழுங்கு படித்ததும் பணிகளில் ஈடுபட்டதை வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு
No comments:
Post a Comment