குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்களிடையே அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 October 2024

குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்களிடையே அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை,  ஆல் த சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். உப்பட்டி சுகாதார ஆய்வாளர் பரணிகுமார், 

ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ராஜா, மகேந்திரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நெலாக்கோட்டை வட்டார சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் பேசும்போது அயோடின் தேவை என்பது மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. முன்கழுத்து கழலை அறிவு கூர்மையின்மை, மந்ததன்மை,  கருச்சிதைவு, குறை பிரசவம் என பல்வேறு நோய்களை அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது இதை தடுக்க அனைவரும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவ பருவத்தில் படித்த பாடங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட அயோடின் சத்து அவசியம் ஆகிறது கடல் மீன் தலையில், பேரிச்சம்பழம் உள்ளிட்டவற்றில் அயோடின் சத்து உள்ளது எனினும் போதிய அளவு இல்லை என்பதால் உப்பில் கலந்து வழங்க படுகிறது என்றார் 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறைவினால் 50க்கும் மேற்பட்ட குறைபாடுகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது இதனை போக்கும் விதமாக அயோடின் கலந்த உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை கண்டறிய எலுமிச்சம் பழச்சாறு உருளைக்கிழங்கு வேக வைத்த சாறு ஆகவே உப்பின் மீது போடும் போது உப்பின் நிறம் மாறும் அதுபோல் அரிசி வேக வைத்த தண்ணீர் மற்றும் எலுமிச்சம் சாறு உப்பின் மீது தெளிக்கும் போதும் நிறம் மாறும் இதனை அடிப்படையில் அயோடின் கலந்துள்ளது என்பதை கண்டறிய முடியும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய கூட்டுறவு உப்பு முழுமையாக அயோடின் கலந்து தரமான முறையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். 

தொடர்ந்து அயோடின் பற்றாக்குறை தடுப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் வீடுகளில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. 

இதுபோல்  கொட்டமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, 

மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி,  நெலாக்கோட்டை அரசு உயர்நிலை, 

பாக்கனா ஐ எம் எஸ் உயர்நிலைப்பள்ளி, கரிய சோலை அரசு உயர்நிலைப்பள்ளி, கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் கலைவாணி மேல்நிலைப்பள்ளி, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி புத்தூர்வயல் அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர்கள் அயோடின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவர்கள் வீடுகளில் பயன்படுத்தும் உப்பு கொண்டு வர சொல்லி அயோடின் உள்ளதா என்பதை பரிசோதித்து அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் அயோடின் கலந்த உப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad