நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது அரவேனு பஜார் பகுதி சுற்றுவட்டார எட்டூர் மக்களின் உணவு மற்றும் மருத்துவம் போக்குவரத்து அத்தியாவசிய பணிகளுக்கு இருக்கும் ஒரே இடமாக அரவேனு இருக்கிறது.
மிகவும் குறுகிய இடம் கொண்ட பஜார் பகுதி பிரதான சாலையை கொண்டுள்ளதால் வாகன நெரிசல் விபத்து போன்றவை அடிக்கடி நடைபெறுகிறது. கோத்தகிரி காவல்துறை மிகுந்த சிரமப்பட்டு போக்குவரத்தை சீரமைக்கின்றனர்.
பார்க்கிங் பிரச்னையில் அவதியுறும் அரவேனு பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது வெளிமாவட்ட வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் தானே என எண்ணி தங்கள் கார்களை டாஸ்மாக் கடைக்குமுன்பு சாலையில் அவசர கதியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர் இதனால் பொதுமக்கள் மற்றும் மற்ற வாகனங்கள் ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்க்கு இடையூரு ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துக்களும் வாக்குவாதங்களும் கைகளப்பு ஆகியவை நடைபெறுகின்றன்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து அரவேனு பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை ஒதுக்குபுறமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment