நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை புரட்சியாளர் மறைந்த டாக்டர் எம். எஸ். சுவாமிநாதனை நினைவு கூர்ந்து ஆராய்ச்சி நாள் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 October 2024

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை புரட்சியாளர் மறைந்த டாக்டர் எம். எஸ். சுவாமிநாதனை நினைவு கூர்ந்து ஆராய்ச்சி நாள் கொண்டாடப்பட்டது


நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை புரட்சியாளர் மறைந்த டாக்டர் எம். எஸ். சுவாமிநாதனை நினைவு கூர்ந்து ஆராய்ச்சி நாள் கொண்டாடப்பட்டது


அக்டோபர் 3 ஆம் தேதி, தாளூரில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), டாக்டர் எம். எஸ். சுவாமிநாதனின் இயற்கை புரட்சியினை

மதித்து, அவரின் நினைவாக கல்லூரியின்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவால் ஆராய்ச்சி தினம் ஏற்பாடு  செய்யப்பட்டு இவ்விழாவானது

நளந்தா  அரங்கத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்வில் மாணவர்கள்,  மற்றும் முக்கிய பேச்சாளர்களை ஒன்றுபடுத்தி, பசுமைப் புரட்சி குறித்த ஆராய்ச்சி முன்னேற்றங்களை கொண்டாடும் விதமாக நடைபெற்றது.



இந்நிகழ்வில், கல்லூரியின் நிர்வாக இயக்குனரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான முனைவர் .இராஷித் கசாலி அவர்களும், கல்லூரி டீன் திரு.மோகன்பாபு அவர்களும், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர்.இரஞ்சித் அவர்களும் , கல்லூரி டீன்.முனைவர்.பிரீதம் அவர்களுக்கும் , வளாக மேலாளர் திரு.உம்மர் அவர்களும்,பயோடைவெர்சிட்டி பாதுகாப்பில் விஞ்ஞானியாக உள்ள தன்யா சி. எஸ். (எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, வயநாடு, கேரளா),  நீலகிரி சுற்றுப்புறம் மற்றும் பண்பாட்டு சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. சிவதாஸ் (நீலகிரி), ஏகம் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர். ரவீந்திரன் (நீலகிரி), சோலிடாரிடாட் நிபுணர் மையத்தின் ஆலோசகர்கள் திரு. வினோத் ஷெனாய் மற்றும் திரு. ஏ. மணிகண்டன் (குன்னூர்) மற்றும் தமிழ்நாடு கிராமப்புற மாற்றத்தின் பிரதிநிதி திரு. சுப்ரமணி (நீலகிரி) உள்ளிட்டோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.


கல்லூரியின் பல துறைகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தினர். ஆர்வமிகு பங்கேற்பாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டு, தங்கள் கல்வி திறமைகளை மேம்படுத்தியதற்காக பாராட்டப்பட்டனர்.


மேலும், கல்லூரியின் பேராசிரியர்களால் எழுதப்பட்ட நான்கு புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது.


இந்த நிகழ்வு டாக்டர் சுவாமிநாதனின் வழிக்காட்டுதலுக்கு மரியாதை செலுத்துவதோடு, எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், சமூகத்தில் நிலைத்தொழில் முறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் நடைபெற்றது. விழாவிற்காக ஏற்பாடுகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் பேராசிரியர்களான முனைவர்.தாமரைச்செல்வி முனைவர் ப்ரீத்தி தமிழன்பன் முனைவர் பானுப்பிரியா மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad