நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாளூர்யில் ஆல் தி சில்ரன்- நீலகிரி, மற்றும் ஏகாம் அறக்கட்டளை நீலகிரி, இணைந்து 9 அக்டோபர் 2024 அன்று பி.காம் பி.ஏ மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் உலக புன்னகை தினத்தை ஏற்பாடு செய்துள்ளது.
டாக்டர் ரஷீத் கசாலி, எம்.டி மற்றும் செயலர், பேராசிரியர் மோகன் பாபு - துணைத் தலைவர், கல்வித்துறை டீன் பிரீதம் ஸ்ரீதர், முதன்மை பொறுப்பாளர் முனைவர் ரெஞ்சித், வளாக மேலாளர் உம்மர், துரை தலைவர் முனைவர் தன்யா சி மாத்தாய் ஆகியோரின் ஆதரவு உடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை தலைவர் சுனிதா தலைமை வகித்தார், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ரவீந்திரன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை பேராசிரியர் முனைவர் தாமரைசெல்வி, முனைவர் ப்ரீத்தி, முனைவர் பானு பிரியா மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மாணவர்கள் மணிகண்டன், ஹஸ்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் மெல்பின் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் கூறுகையில் சிரிப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே எடுத்து கூறினார். ஒருவர் தன் சிரிப்பின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மேலும் நோய் வராமல் தடுக்கவும் சிரிப்பது மிகவும் அவசியம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment