சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 11 October 2024

சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை




கூடலுார் மங்குழி அருகே, தனியார் கைவசம் இடத்தில், சந்தன மரம் வெட்டி கடத்தியது தொடர்பாக, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கூடலுார் மங்குழி பகுதியில், தனியார் இடத்தில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.


வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வில் மோகனன் என்பவரின், கைவச நிலத்திலிருந்து, 45 செ.மீ., சுற்றளவு கொண்ட சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். மரம் வெட்டி கடத்தப்பட்ட இடம் செக்சன்--17 நிலமாகும்,' என்றனர்.


தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad