உதகையில் உள்ள உணவகத்தில் பரபரப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

உதகையில் உள்ள உணவகத்தில் பரபரப்பு



உதகையில் பரபரப்பு பிரபலமான உணவகத்தில்  swiggyயில் ஆர்டர் செய்து பல மணி நேரம் ஆகியும் உணவு வராத காரணத்தினால் வாடிக்கையாளர் உணவகத்துக்கு வந்து உணவு ஏன் இவ்வளவு தாமதம் ஆகின்றது என்று கேட்டதற்கு சரிவர பதில் கூறாமல் ரீஃபண்ட் பணம் உங்களுக்கு 24 மணி நேரத்தில் வந்து சேரும் கிளம்புங்கள் என்று நக்கலாக கூறி அலைபேசி மூலம் தன் மனைவியுடன் வந்த வாடிக்கையாளரை வீடியோ எடுத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டியும் உள்ளனர்.. 


தகவல் அறிந்து காவல்துறையினர் உடனடியாக உணவகத்துக்கு வந்தவுடன் அந்த வீடியோவை டெலிட் செய்து நான் எடுக்கவே இல்லை என்று கூறி அவருடைய அலைபேசியை கொடுக்க மறுத்து உணவகத்துக்குள்ளையே வீசிவிட்டார். அவருடைய நடவடிக்கை மற்றும் அவருடைய பதில் சந்தேகப்படும்படி இருந்ததால் காவல்துறையினர் அந்த பிரபலமான உணவகத்தில் வேலை செய்பவரை அழைத்துச் சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad