நீலகிரி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான ஓட்டப்பந்தய போட்டிகள் உதகை HADP மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குன்னூர் திருமதி.புல்மோர்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவன் முகமது சர்பாஸ் மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குன்னூர் திருமதி.புல்மோர்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவி புவனிஷா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 14 வயதிற்கு உட்பட்ட வட்டெரிதல் போட்டியில் திருமதி.புல்மோர்ஸ் பள்ளி மாணவி ராஜலக்ஷன்யா மூன்றாவது இடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர், முதல்வர், உடற்பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment