நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை கோவை பேரூர் மடாதிபதிகள் ஆதீனம் அவர்களுக்கு சொந்தமான இடம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் தங்கள் வசம் எடுத்து உள்ளனர்.
இதில் கோயில் உள்ள பகுதி மட்டும் பண்டைய காலம் தொட்டு பிராமணர்களால் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது அதை இன்று காலை ஆதீனம் மடத்துக்கு சேர்ந்தவர்கள் கோவிலுக்கு பூட்டு போட்டு யாரையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க இல்லை இதை அறிந்த பிஜேபி இந்து சமய தலைவர் மற்றும் மகளிர் குழுக்கள் அனைவரும் சேர்ந்து கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதை அறிந்த உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் மேற்கு நகர காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் விசாரணை பேரில் சமாதான உடன்படிக்கை செய்து கோவில் தரிசனத்திற்கு அனுமதி அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திக்காக உதகை குற்றப் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு
No comments:
Post a Comment