இ-பாஸ் முறை நீட்டிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

இ-பாஸ் முறை நீட்டிப்பு




சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து  இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில்,  சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ்  நீட்டிக்க உத்திரவிடப்பட்டுள்ளது


எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும். பொது மக்கள். நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 



No comments:

Post a Comment

Post Top Ad