நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் இஸ்லாமிய மதத்தின் இறை தூதரான நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு எமரால்டு பகுதியில் அமைந்துள்ள அஹலே சுன்னத் வல் ஜமாஅத் பரிபாலன சபையில் நபிகளாரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பேரணியானது இன்று காலை சரியாக 10:30 மணி அளவில் தொடங்கியது.
நிகழ்வின் ஆரம்பமாக மத ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் மத நல்லிணக்க பேரணியானது எமரால்டு பள்ளிவாசலில் ஆரம்பித்து எமரால்டு பஜார் பகுதிக்கு சென்று மீண்டும் பள்ளிவாசல் வந்தடைந்தது இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தார்கள். இந்தப் பேரணியை எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு கார்த்திக் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நபிகளாரின் வரலாறு சிற்றுரையாற்றி பள்ளிவாசலில் தலைமை இமாம் மௌலானா அஜீஸ் காதிரி ஹஜரத் அவர்கள் அனைவர் மத்தியிலும் எடுத்துரைத்தார் பின்னர் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை வாழ்த்துரை வழங்கியும் நிகழ்வில் இஸ்லாமிய சிறுவர்கள் நடனமாடியும் கொடிகள் அசைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக (பேரணி) நடைபெற்றது.இந்நிகழ்வில் அனைத்து மத மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது மத ஒற்றுமையை எடுத்துரைக்கும் பேரணியாக இருந்ததால் அனைவர்களும் சந்தோசம் அடைந்தார்கள் அடுத்தபடியாக பள்ளிவாசலில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று. சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளும், நபி புகழ் மாலைகளும், மதரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை காவல்துறை நண்பர்கள் ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஒத்துழைத்து இந்த பேரணி மற்றும் மீலாது விழாவை நடத்தி தந்ததற்கு எமரால்டு பள்ளிவாசலை சேர்ந்த அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment