பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதிகளில் தமிழக வெற்றி கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 October 2024

பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதிகளில் தமிழக வெற்றி கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...


நீலகிரி மாவட்டம் பந்தலூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட  கொளப்பள்ளி பஜாரின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியானது நீலகிரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் மற்றும் கூடலூர் சட்டமன்ற பொறுப்பாளர் திரு கார்த்திக்  அவர்களின் தலைமையில் சிறப்போடு நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட  மகளிர் அணி தலைவி டீனா கார்த்திக் கூடலூர் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. மணிபாரதி தலைமை வகித்தார். பந்தலூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பந்தலூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இறுதியில் இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியானது கொடி பாடலை இசைத்து இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad