அகலார் குருகுலம் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அகலார் குருகுலம் மெட்ரிக் உயர் நிலை பள்ளியில் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கிற்கு பள்ளி தாளாளர் திருமதி. வாசுகி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய போது கூறிய கருத்துக்கள்.....
அப்துல்கலாம் அவர்கள் வாழும் காலத்திலும் இன்றும் கூட குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக விளங்கினார். அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்த காலத்தில் தான் இந்தியாவின் முதல் ராக்கெட் ஆன ஆர்யாபட்டா விண்வெளியில் ஏவப்பட்டது. அந்த சமயத்தில் அவர் ராக்கெட்டின் சில பகுதிகளை சைக்கிளில் கொண்டு சென்ற பழைய புகைப்படம் உலக புகழ்பெற்றது. அது அவருடைய எளிமையை உலகிற்கு பறைசாற்றியது. ஒரு ராக்கெட்டின் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட எடை குறைந்த வலுவான உலோகத்தை உடல் ஊனமுற்றோருக்கான எடை குறைந்த செயற்கை கால்களை உருவாக்கி கொடுத்து அவருடைய மனிதாபிமானத்தை உலகிற்கு காட்டினார். அவர் சுற்றுசூழல் பாதுகாப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் எழுதிய '2070 ல் ஒரு தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்' என்ற கவிதை உலக புகழ் பெற்றது. அதில் அந்த தந்தை இயற்கையை அழித்த பாவிகள் நாங்கள். எங்களை மன்னிப்பாயாக என்ற வரிகள் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ வைத்தது. புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பேரிடர்கள் இனி நம் அன்றாட வாழ்க்கையாகும். ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் வெப்பம் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு சேலம் போன்ற பகுதிகளில் வெப்பத்தின் அளவு 110 டிகிரி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து கெடுத்ததை யாரும் மறக்க முடியாது. பூமியின் காலநிலை மாற்றத்திற்கு அமெரிக்கா, சீனா போன்ற சில வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க்க வேண்டும். பெருகி வரும் நுகர்வு கலாச்சாரத்தால் இயற்கை சூரையாடப்படுகிறது தற்போது பெரும் வியாபார நிறுவனங்கள் மக்களின் தேவைக்காக பொருட்களை உற்பத்தி செய்வதில்லை தங்கள் லாப வெறிக்காக பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கிறார்கள். மக்களை பொருள் தின்னிகளாக மாற்றுகிறார்கள். நியூரோ மார்க்கெட்டிங் என்ற புதிய வணிகவியல் துறை மனோதத்துவரீதியில் மக்களை எவ்வாறு பொருட்களை வாங்கவைப்பது என்பது குறித்து ஆராய்கிறது. அமெரிக்கர்களை போல அனைவரும் வாழ ஆசைப்பட்டால் நமக்கு இது போல ஒன்பது பூமிகள் வேண்டும். இனி இருக்கும் ஒரு பூமியையாவது காப்பாற்றுவது அனைவரின் கடமை என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு அவர்கள் கூறினார்.
பசுமை நீலகிரி 2024 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அரிமா மோகன்குமார், நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகி திம்பட்டி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார் ஆசிரியை ஷர்மிளா நன்றி கூறினார். இறுதியாக மாணவர்கள் மரக்கன்று களை கையில் ஏந்தியவாரு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment