அக்டோபர் 16, 17 மலை ரயில் சேவை ரத்து.
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையால் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 16 புதன் மற்றும் 17 வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்டப்பொறியாளர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment