இன்று 25/10/2024 அரசு மேல்நிலைப்பள்ளி இத்தலாரில் எஸ்.எம்.சி கூட்டம் திருமதி சிவரஞ்னி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தேவராஜன் அவர்கள் பள்ளியின் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு மற்றும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அதனைதொடர்ந்து பள்ளியின் எஸ்.எம் .சி தலைவி திருமதி.சிவரஞ்சனி அவர்கள் வருகின்ற ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.இந்த கூட்டத்தில் பள்ளியின் (தமிழ் )பட்டதாரி ஆசிரியர் திரு .கண்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.அதனை தொடர்ந்து எஸ்.எம் .சி உறுப்பினர்கள் அவர்களின் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். இந்த கூட்டத்தில் தலைவர் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் எஸ் .எம் .சி உறுப்பினர்கள் இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக, பணியாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பித்து உள்ளார்கள்.இறுதியில் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள் நன்றியுரை கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment