நீலகிரி மாவட்டம் குந்தா வனச் சரகத்திற்குட்பட்ட கிண்ணக்கொரை பகுதியில் சாலையோர அபாயகர மரங்கள் மழைக்காலங்களில் வேரோடு சாய்ந்து விழுவதை தொடர்ந்து வனத்துறை சார்பில் மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது.
அதன்படி, மிகவும் அபாயகர நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட மரங்களை டெண்டர் விடப்பட்டு தனியாரால் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை வனக் காப்பாளர் சிவானந்தம் வனக்காவலர் ஆறுமுகம் ஆகியோர் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த மூவர், அங்கு வனத்துறையினரிடம் மரங்கள் வெட்டியது குறித்தும், அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் மஞ்சூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கிண்ணக்கொரை பகுதியில் அபாயகர மரங்களை அகற்றும் பணியை தணிக்கை செய்து கொண்டிருந்த வனத்துறையினரை பணம் கேட்டு மிரட்டியும், பணி செய்யவிடாமல் தடுத்தும் சில டம்மி பத்திரிக்கைகளின் பெயர்களில் நிருபர்களாக இருந்து கொண்டு மாடல் ஹவுஸ் ஆற்றில் வீடு கட்டியுள்ள பக்ரா பாபு, ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ், அருவங்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய மூவரும் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் வழக்கு பதிந்து செந்தில்குமாரை (54) கைது செய்தனர். மேலும் நவம்பர் 8ம் தேதி வரை காவலில் வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள பக்கரா பாபு மற்றும் தினகரன் என கூறும் சுரேஷ் ஆகியோரை மஞ்சூர் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment