கூடலூர் வட்டார அளவிலான பள்ளிகளில் குடிமக்கள் என்ற பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 October 2024

கூடலூர் வட்டார அளவிலான பள்ளிகளில் குடிமக்கள் என்ற பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது


கூடலூர் வட்டார அளவிலான பள்ளிகளில் குடிமக்கள் என்ற பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட கல்வித்துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகியன சார்பில் பந்தலூர் டியூஸ் பள்ளி கூட்டரங்கில் கூடலூர் வட்டார அளவிலான நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் நுகர்வோர் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.  


நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் சுந்தரலிங்கம், மைய நிர்வாகி மகேந்திரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பயிற்சியை துவக்கி வைத்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது மாணவர்கள் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்படுத்த படுகிறது. இதனை இன்னும் ஊக்கமாக செயல்படுத்த ஆண்டுதோறும் பயிற்சிகள் வழங்கபடுகிறது. நுகர்வோர் கல்வியை ஆசிரியர்கள் ஆக்க பூர்வமாக மாணவர்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்றார்.


முன்னிலை வகித்த டியூஸ் முதல்வர் சுதிந்திரநாத் பேசும்போது மாணவர்கள் இடையே நுகர்வோர் சார்ந்த கல்வியை எடுத்து செல்வது அனைத்து குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர்கள் பங்களிப்பு அவசியம். மாணவர்கள் பொருட்கள் பற்றிய அறிவை பெற ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்கள் பொருட்கள் வாங்கும் போது அவற்றை பற்றிய தகவல் கேட்டு வாங்கவும், தேவையான பொருட்கள் வாங்கவும், ஆடம்பர பொருட்களை தவிர்க்கவும், குளிர்பானங்கள் வாங்கும் போது அவை தயாரிக்கும் நிலைகள் காலாவதி தேதி ஆகியன பார்த்து வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையகும் என்றார். 


தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொது செயலாளர் ரமேஷ் பேசும்போது நுகர்வோர்கள் நமது அறிவை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தினங்கள் அனுசரிக்கபடுகிறது அவற்றை குறித்து அறிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகளின் பயிற்சி இயக்குனர் சரவணன் பேசும்போது நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை அதிகம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நுகர்வோர் உரிமைகளான பாதுகாப்பு பெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, புகார் தெரிவிக்கும் உரிமை, குறைகள் தீர்க்க பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை ஆகியன குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதை குறித்து மாணவர்களிடம் எடுத்துக்கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 


இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசு பேசும்போது


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற முடியும் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வாதிடமும் இந்த சட்டத்தை வழி வைக்கப்பட்டுள்ளது புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 இன்னும் அதிகபட்சமான சலுகைகளை வழங்கியுள்ளது இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுபோல குறைகளை பதிவு செய்து இருக்கிறார்கள் உணவு பாதுகாப்பு வாட்ஸ் அப் எண்கள் தரப்பு உறுப்பு குறித்த ஆப் உள்ளிட்டதை குறித்து அறிந்து கொள்தல் அவசியம் என்றார்.


தொடர்ந்து நுகர்வோர் மன்றங்களின் வருங்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட குடிமக்கள் என்ற பொறுப்பாசிரியர்கள் பங்கேற்றனர். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் மகேந்திர பூபதி, பிரேம்குமார் இந்திரஜித் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad