உதகை அரசு கல்லூரியில் மரம் நடும் விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 20 October 2024

உதகை அரசு கல்லூரியில் மரம் நடும் விழா.

 


உதகை அரசு கல்லூரியில் மரம் நடும் விழா.


நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி கிளை சார்பில் காலநிலை மீட்டெடுப்பு பசுமை நீலகிரி 2024 என்னும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது. அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ராமலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வன அலுவலர் திரு. கெளதம் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அரிமா திரு.  மோகன்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே.ஜே. ராஜூ அவர்கள் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்  செஞ்சிலுவை சங்க  நிர்வாகிகள் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மர கன்றுகள் நட்டு மகிழ்ந்தார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad