சுற்றசூழல் பாதுகாப்பில் உல்லத்தி ஹட்டி மக்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 October 2024

சுற்றசூழல் பாதுகாப்பில் உல்லத்தி ஹட்டி மக்கள்.



 ராஜஸ்தான் மாநிலத்தில் பீஷ்நோய்கள் என்ற ஒரு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு அந்த நாட்டின் அரசர் காட்டில் உள்ள மரங்களை வெட்ட ஆட்களை அனுப்பிய போது அதனை எதிர்க்கும் வகையில் அந்த பழங்குடியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் மரங்களைக் கட்டித் தழுவி மரம் வெட்டப்படுவதை தடுத்தனர். ஆனால் அந்த கொடுங்கோல் அரசன்    மரத்தோடு அதை கட்டித் தழுவிய பெண்களையும் வெட்டி சாய்த்தான். அதன் பிறகு  25 வருடங்களுக்கு முன்னால் இமாச்சலப் பிரதேசத்தில்  சிப்காட் எனப்படும் சுற்றுச்சூழல் இயக்கம் சார்பாக பெண்கள் மரங்களைக் கட்டித் தழுவி  காடுகள் அழிக்கப்படுவதை தடுத்தனர். இவையெல்லாம் சுற்றுச்சூழல் வரலாற்றில் சில மைல்கல் என்று கூறலாம். இன்றைய சூழலிலும் ஒரு கிராமமே ஒன்று திரண்டு மரம் நடுகிறார்கள் என்பது காலநிலை மாற்றம் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தற்காலத்தில் பூமி காப்பாற்றப்படும் என்ற ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.



 நீலகிரி மாவட்டத்தின் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல்  பசுமை நீலகிரி 2024 என்ற திட்டத்தின் கீழ்  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும்  திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தினால்  உத்வேகம் பெற்ற உதகையை அருகே உள்ள  உல்லத்தி என்ற ஹட்டி  மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். மரங்களை நடுவதற்கான குழிகளை கூட  நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல்  கை வலிக்க குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த கிராமம் தற்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில்  இந்தியாவிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று கூறுவார்கள். சுற்றுச்சூழல்  பாதுகாப்பில் உல்லத்தி கிராமம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இந்த பூமி காப்பாற்றப்படும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் பின்னணியில்  கிராமத்தின் ஊக்க சக்தியாக இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு . குண்டன்  மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. சுப்ரமணியன்  ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இந்த வெற்றி கதையை குறித்து  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும்  இந்தத் திட்டத்தின் இயக்குனருமான  திரு. கே ஜே. ராஜு அவர்கள் கூறும்போது  இதுபோன்ற மற்ற கிராம மக்களும் மரம் நட முன் வந்தால்  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்பது மிக எளிதான ஒரு செயல் என்று கூறினார். இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  திரு. மோகன் குமார் அவர்கள் உல்லத்தி ஹட்டி  மக்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad