தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் கோத்தகிரியில் உள்ள விஸ்வ சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சாய்பாபா தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் கொடுக்கப்பட வேண்டும்
. மூலிகை செடி தோட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். கோத்தகிரி குடிமக்கள் மன்ற தலைவர் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் செயலர் வழக்கறிஞர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவி திருமதி. ஜெயக்குமாரி அவர்கள் தமது வாழ்த்துரையின் போது எளிமையான சிக்கனமான வாழ்க்கை மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு உகந்தது எனக் கூறினார்.
அரிமா சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ரெட்டி செயலர் ரமேஷ் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசிய மாநில கருத்தாளர் ஆசிரியர் கே .ஜே . ராஜு அவர்கள் பேசும்போது பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே தயாரிக்கிறார்கள். மக்களின் தேவையைக் குறித்து கவலை இல்லாமல் நுகர்வு கலாச்சாரத்தில் மக்களை சிக்க வைக்கின்றனர். மக்களுக்கு பொருட்களை வாங்குவது தான் வாழ்க்கை என்று ஒரு நிலையை உருவாக்குகிறார்கள். பெரும்பான்மையான பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி குப்பையாக வெளியேற்றுவதற்கு வெளியேற்றும் வகையில்உற்பத்தி செய்யப்படுகின்றன. நுகர்வோர்கள் வாங்கிய பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் உரிமை மறைமுகமாக மறுக்கப்படுகிறது. தேவையற்ற ஆடம்பரமான பொருட்களின் உற்பத்தி கார்பனின் அளவை அதிகரிக்க காரணமாகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் வெளிப்படுத்தும் கார்பன் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாரம் ஒரு நாள் இஸ்திரி போடாத துணியை போடுவதன் மூலம் 250 கிராம் கார்பன் டை ஆக்சைடை சேமிக்கலாம். தண்ணீர் மற்றும் மின்சாரம் பயன்பாடு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்களை கூறினார். முன்னதாக பள்ளி முதல்வர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். காலநிலை மாற்ற மீட்டெடுத்தல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பழ மரக்கன்றுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பள்ளி வளாகத்தில் பழ மரங்கள் நட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment