தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி அவர்களது பதவிக்காலம் ஜூலை 31 அன்று நிறைவடைந்த நிலையில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது தற்போது இந்தியாவில் பல மாநில ஆளுநர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் ராணுவதளபதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே. சிங் அவர்களை பரிந்துரைப்பதாக மத்திய அரசு வட்டார தகவல் தெரிவித்துள்ளது.
விஜயகுமார் சிங்
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது தமிழக பாஜகவின் மேலிட தலைவராக செயல்பட்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக விகே சிங் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment