முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி



   தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்த்தப்பட்டது .அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டது. 



அதில் எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் பலதரப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கல்லூரியில் செயலர் திரு மோதிலால் கட்டாரியா அவர்களின் ஒப்புதலின் கீழ் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் வெற்றிகளை பதிவு செய்துள்ளார்கள். கைப்பந்து ,கால் பந்து, மட்டைப்பந்து (கிரிக்கெட்) ஆகிய  போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும் ,சிலம்பம் சுற்றுதலில் முதலிடத்தையும் சதுரங்கத்தில் முதல் இரண்டு இடங்களையும் பிடித்து தங்களின் விடாமுயற்சியால் கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். 


வெற்றி பெற்றோர்களுக்கு தமிழக அரசின் ரொக்கப் பரிசு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக விளையாடியவர்களை வல்லுனர் குழுக்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்துள்ளது. கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்கள் மாணவிகளுக்கு உற்சாகத்தினையும் ஊக்கத்தினையும் அளித்து உதவினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் கே. அகிலா இடைவிடாது மாணவிகளுக்கு பயிற்சி அளித்து பல்வேறு வெற்றிகளை பதிவு செய்து உடனிருந்து பயணித்து உதவினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர். என் வினோத் குமார். மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad