அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தமிழகம் நீலகிரியில் இருந்து பெண் வழக்கறிஞர்கள் பங்கேற்பு
அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக மாநில பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்பெங்களூர் விதான சவுதாவில் உள்ள பெனிகுயிட் அரங்கத்தில் இன்று காலை தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது
தமிழ்நாட்டில் இருந்து வந்து பங்கேற்ற மூத்த பெண் வழக்கறிஞர் பத்மினி தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள்சங்கத் தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் தலைமையில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் நீலகிரியில் இருந்தும் பெண் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்
இந்த கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பெலா எம். திரிவேதிஉச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி என்.வி. அஞ்சரியா மத்திய அமைச்சர்ராம் மெகாவால் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி குமுதினிமுதல் அமைச்சரின் சட்ட ஆலோசகரும் எம்எல்ஏவுமானபொன்னன்னா பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேக் சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
ஊட்டியில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாலினி பிரபாகரன், கவிதா, ரேவதி,
நிர்மலா, சப்னா,லிபிகா,நஜுமா,
பிச்சையம்மாள், ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் நீலகிரி கிளைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் தெரிவிக்க பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment