கரிமர ஹட்டியில் கரடி டேரா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

கரிமர ஹட்டியில் கரடி டேரா.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கரிமர ஹட்டிக்கு செல்லும் சாலையில் கரடி பகல் நேரத்தில் உலாவருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தமிழக குரல் ஏற்கனவே செய்தி வெளியிட்டது  மற்றும் வனத்துறையினரின் பார்வைக்கும் சென்றன ஒரு மாதம் கடந்த நிலையில் கரிமர ஹட்டியில் ஓர் வீட்டின் மீது பகல் நேரத்தில் கரடி டேரா அடித்து அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரம் அச்சுறுத்தியது பிறகு சென்றுவிட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad