அக்டோபர் - 05 : உலக ஆசிரியர் தினம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

அக்டோபர் - 05 : உலக ஆசிரியர் தினம்.



ஆசிரியன் என்பவன்

மாணவச் சமூகத்தை

உருவாக்குபவன் அல்லன்

மாறாக உயிரூட்டுபவன்.


ஒரு சிறந்த ஆசிரியனின்

பண்புகளை, குணங்களை

பார்க்கும் மாணவர்களின்

மனதில் அப்படியே பதியும்.

எனவே ஆசிரியன்...

மாணவனின்

காலக் கண்ணாடியாவான்.


தன்னிடம் ஒப்படைக்கப்படும்

மாணவனை நல்ல மாணவனாக

மட்டுமன்றி, நல்ல மனிதனாக

மாற்றும் பொறுப்பும்

ஓர் ஆசிரியனுக்கு இருக்கிறது.


வெறும் மாணவனாக 

பள்ளிக்கு வரும் அவனுக்கு 

ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம்,

படிப்பு என அறிவுக் கண்ணை

திறந்து வைத்து அவனை

சாதனையாளனாக

ஆக்குபவன் ஆசிரியன்.


மாதா, பிதா, குரு,

தெய்வம் என்றார்கள்...

வேறு எந்தப் பணிக்கும்

கிடைக்காத பெருமை...

ஓர் ஆசிரியனுக்கு

உள்ளது என்பதற்கு...

இப்பழமொழியே சாட்சி.


ஆசிரியன் என்பவன்

கற்பிப்பவன் மட்டுமல்லன்,

என்றென்றும் கற்பவனும்கூட.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad