நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி KPS தனியார் கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். கூடலூர் அத்திக்குன்னா பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விஞ்ஞானி அசோக்கு குமார் அவர்கள் சென்னையில்
பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட 11 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். அவர் மாணவர்களிடையே பேசும்போது தான் ஒரு தேயிலை தோட்ட தொழிலாளியின் மகன் என்றும் கல்வி கற்கும் காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய போதும் சாதிக்க வேண்டும் என்ற ஒரே வெறியுடன் கல்வி கற்று இன்று ஒரு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தால் இருமுறை உலகில் சிறந்த விஞ்ஞானி என பாராட்டப்பட்டுள்ளார்.
உலகில் உள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னை என்பது குப்பைகளை எவ்வாறு பயனுள்ள பொருட்களாக மாற்றுவது என்பதுதான். திடக்கழிவு பொருட்களிலிருந்து எரிசக்தி தயாரிப்பது இவருடைய ஆய்வுப் பொருளாக உள்ளது. அதாவது குப்பைகளில் இருந்து எவ்வாறு மின்சாரம் தயாரிப்பது என்பது குறித்த ஆய்விற்காக அவருக்கு இரு முறை உலக விஞ்ஞானி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதேபோல திரவ கழிவிலிருந்து பூஞ்சைகளை பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்தெடுப்பதும் அதனைக் கொண்டு எரிசக்தியை தயாரிப்பது குறித்து கடந்த 15 ஆண்டுகளாக ஆய்வு செய்வதாகவும் இதுகுறித்து உலகப் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் உரையாற்றி உள்ளதாகவும் 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளதாகவும் கூறினார். சாதனை புரிவதற்கு சூழ்நிலை ஒரு தடையே அல்ல எனவும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை எனவும் கூறி மாணவர்களிடையே தன்னம்பிக்கையூ ட்டினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. ஜே. ராஜு அவர்கள் பேசும்போது சமுதாயத்தில் அறிவியல் விழிப்புணர்வை கொண்டு செல்லும்போது பல மூடநம்பிக்கைகள் தடை கல்லாக உள்ளது. நாட்டில் போலி அறிவியல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த மாயச் சூழலில் மாணவர்கள் சிக்கிக் கொள்ளாமல் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் தியாகு அனைவரையும் வரவேற்றார். விரிவுரையாளர் பிரதீப் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment