நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவராக உள்ளார்., 6 -வயது சஞ்சீவராஜ். இவரின் தந்தை ஆனந்தராஜ் என்ஜினியர் ஆக உள்ளார்.
தாயார் பிரியங்கா தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மாணவர் சஞ்சீவராஜ் வகுப்பில் நடத்தும் பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு, ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதில் திறமை உள்ளவராக உள்ளார்.
மாணவரின் திறமையை பார்த்த பள்ளி தாளாளர் பாதர் ஜார்ஜ், முதல்வர் பிஜூ மற்றும் வகுப்பு ஆசிரியர் கோகிலா ஆகியோர் மாணவரின் திறமையை வெளிக் கொண்டு வர எண்ணினார்கள்.
தொடர்ந்து இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் அவரின் தலைநகரங்களை மாணவருக்கு கற்றுக் கொடுத்தனர். இதனை புரிந்து கொண்ட மாணவரும் மாநிலங்களின் பெயர் மற்றும் அவற்றின் தலைநகரங்களை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் கூற துவங்கியுள்ளார்.
தொடர்ந்து சென்னையில் நடந்த சாதனையாளருக்கான போட்டியில் பங்கேற்கச் செய்து, 37 நொடிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் பெயர் மற்றும் அவற்றின் தலைநகரங்களை கூறி சாதனை படைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், முதல் வகுப்பு படிக்கும் சஞ்சீவராஜின் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் தாளாளர், முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாதனை மாணவருக்கு வாழ்த்து கூறினார்கள்.
கிராமத்தைச் சேர்ந்த முதல் வகுப்பு படிக்கும் இந்த மாணவர் அபார நினைவாற்றல் கொண்டுள்ளது அனைவரையும் வியக்க செய்துள்ளது.
No comments:
Post a Comment