உதகை நகராட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் தெரு நாய்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 September 2024

உதகை நகராட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் தெரு நாய்கள்



 நீலகிரி மாவட்டம் உதகை சாலைகள் மற்றும் தெருக்களில் எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள். நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தன் கவனத்தை செலுத்துவதில்லை என்பதற்கு நகராட்சி அலுவலக எல்லைக்குள் சுற்றித் திரியும் தெருநாய்களை பார்த்து புரிந்து கொள்ளலாம் . பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வரும்போது இந்த தெரு நாய்களின் அச்சத்தால் தயங்கி தயங்கி வருகின்றனர் . இந்த விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் கவனத்தை செலுத்தாததால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் உதகை நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது. தினமும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இதனால் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது.



நகராட்சிக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் இந்த தெருநாய்களின் தொல்லைகளும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. முடிவே இல்லாத இந்த தெரு நாய்களின் தொல்லைக்கு முடிவு எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள கடை.

No comments:

Post a Comment

Post Top Ad