நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிரசித்திபெற்ற கன்னேரிமுக்கு ஹட்டியில் ஶ்ரீ சந்தான வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் உரியடி உற்சவம் செப்டம்பர் 16 திங்கட்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு உற்சவர் புறப்பட்டு கோயிலின் முன்புறம் பூஜைகள் நடைபெற்றது.
ஹட்டிமக்கள் மற்றும் சுற்றுவட்டார ஹட்டி மக்கள் பூஜைகள் கொடுத்து கிருஷ்ணர் ஆசிபெற்றனர்.
மாலை 5.30 மணிக்கு உற்சவர் புறப்பட்டு உற்சவர் பார்வையில் உரியடி நடைபெற்றது.
கன்னேரிமுக்கு ஹட்டி மக்கள் சுற்றுவட்டார ஹட்டி மக்கள் ஒன்றுதிரண்டு பேண்டு இசைக்கு படுகர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் நடந்த உரியடிக்கும் நிகழ்வு முடிந்து கோயிலை சுற்றி வலம் வந்து
இரவு 7.30 மணிக்கு உற்சவருக்கு திருஷ்டி கழிப்பு நிகழ்வுடன் உற்சவர் கோயிலில் நுழைந்தவுடன் கிருஷ்ணருக்கு மங்களம் பாடி தாலாட்டு துயில் பாடல் பாடப்பட்டு.
கிருஷ்ணர் உரியடி உற்சவ விழா இனிதே நிறைவடைந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment