புவி வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், அதிக எண்ணிக்கையிலான புயல்கள் , பெருவெள்ளம், அதிக வெப்பம் போன்ற அதீத காலநிலை மாற்றத்தை நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 'காலநிலையை மீட்டெடுத்தல் - பசுமை நீலகிரி 2024' என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நமது நீலகிரி மாவட்டத்தில் நடுவதற்கான முன்னெடுப்பை அறிவியல் இயக்கம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் ஒரு லட்சம் மரம் நடும் திட்டத்தின் இயக்குனருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே. ராஜு அவர்கள் கூறுவதாவது.....
இந்தத் திட்டத்தில் அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பசுமை ஆர்வலர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஒருவருக்கு ஒரு மரம், ஒரு விவசாயிக்கு ஐந்து மரம், ஒரு கிராமத்திற்கு 500 மரக்கன்றுகள் வழங்கி அதனை நட்டு பாதுகாப்பாக வளர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரி வளாகங்கள், எஸ்டேட்டுகள் போன்ற அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான விரிவான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அனைத்து பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். மேலும் இத்திட்டத்தில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள்94533 17439, மற்றும் 94433 79545 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment