கூடலூர் பகுதியில் நீண்ட காலம் பயன் தரும் தேயிலை, காபி, குறுமிளகு, பாக்கு, ஏலம், கிராம்பு தவிர வயல்களில் குறுகிய கால பயன் தரும் நெல் மற்றும் காய்கறி, நேந்திரன் வாழை, இஞ்சி பயிரிட்டு வருகின்றனர்.
இதில், ஆண்டுக்கு ஒரு முறை பயன் தரும் நேந்திரன் வாழை, கடந்த சில மாதங்களாக அறுவடை செய்து வருகின்றனர். கடந்த மாதம் கிலோவுக்கு, 52 ரூபாய் விலை கிடைத்த நிலையில், கேரளா மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் போது, கிலோவுக்கு, 60 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், எதிர்பாராத வகையில் தற்போது, கிலோவுக்கு, 24 ரூபாய் கூட கிடைப்பதில்லை. அறுவடை முடியும் தருவாயில், விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டாவது அதிக விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில், நேந்திரன் வாழை, நடவு பணிகள் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன், வாழைக்கு ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்றாலும், கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, நல்ல விலை கிடைக்கும். ஆனால், நடப்பாண்டு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடகாவில் நேந்திரன் வாழை அறுவடை அதிகரித்துள்ளதும், இதற்கு முக்கிய காரணம். எனினும், அடுத்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment