பந்தலூர் அடுத்துள்ள அம்பல வயல் தலைமை ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றார் இவரை ஊர் பொதுமக்கள் மாணவர்கள் அய்யங்கொல்லி பகுதியில் மேலதாலங்களுடன் வரவேற்பு..
பந்தலூரை அடுத்துள்ள அய்யங்கொல்லி பகுதியில் இயங்கி வருகிறது இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல் பட்டு வருகிறது.
இங்கு கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதோடு பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.இன்னிலையில்
அரசு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் ஐந்தாம் தேதி முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து இதில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நல்ல ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது .
நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தலூர் அருகே அம்பல வயல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கனகாம்பிகாவுக்கு நல்லா ஆசிரியர் விருது தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1995 ஆம் ஆண்டு அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார் பிந்து 2011 ஆம் ஆண்டு முதல் அம்பலவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பு தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார் . இவருக்கு இன்றைய தினம் அய்யங்கொல்லி பஜாரில் வைத்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் மேளதாலத்துடன் வரவேற்பளித்தனர்.பின்பு பேரணியாக சென்று.பள்ளி வளாகத்தை செற்றடைத்தது .
இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.பள்ளி இடைநிலை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கூடலூர் முன்னால் சட்டமன்ற மன்ற உறுப்பினர் திராவிடமணி யூனியன் கவுன்சிலர் ஜிஜீஜோசப்.நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் ஜிசாசன்னி பரமேஸ்வரன் .கவுன்சிலர் தாமஸ் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி திருச்செல்வி ஆசிரியர் மகாலிங்கம் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவ மாணவியர் உடன் இருந்தனர்.
கூட்டத்தில் கூட்டத்தில் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி அவர்கள் கூறுகையில் தளபதியார் ஆட்சி காலத்தில் விருது பெற்றது இந்த பள்ளிக்கும் மக்களுக்கும் பெருமையாக உள்ளது என்று கூறினார்.தளபதியார் பள்ளி மாணவ மாணவியருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன அதிலும் பள்ளி மாணவருக்குஆறு முதல் பனிரென்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க்கு மேற்படிப்பிற்கு ஊக்க தொகையை வழங்கி பள்ளி மாணவர்கள் மேம்படுத்தி விரதோடு விளையாட்டுத்துறையிலையும் தலைசிறந்து விளங்க விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை மாணவர்கள் பயன்படுத்தி படிப்பில் தலைசிறந்து விளங்குவதோடு நல்ல மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் . இந்தப் பகுதியில் அதிக அளவு பழங்குடியின மக்கள் ஏழை எளிய மாணவர்கள் அதிகமாக வசித்து வரக்கூடிய பகுதியாக இருக்கிறது இங்குள்ள மாணவர்களை படிக்க வைப்பதற்கு இங்கு உள்ள ஆசிரியர்கள் பெரும் முயற்சியை எடுத்து வருவதோடு அவர்களை அவர்கள் மீது கவனம் செலுத்தி நன்றாக படிக்க வைத்து அவர்களே ஒரு தலை சிறந்த மாணவர்களாக உருவாக்கி வருவதில் முக்கிய பங்கு எடுத்து செயல்பட்டு வருகின்ற இந்த ஆசிரியர் என பெருமிதமாக கூறினார்.
இது போல் நீங்களும் ஆசிரியராக இந்த பள்ளியில் பணியாற்றி வர கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment