சுற்றுலாத்தலமான உதகையில் பல விளையாட்டுகள் மிகவும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்கள் முக்கியமாக கால்பந்து மற்றும் கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகள் . இவை அனைத்திற்கும் விளையாட்டு மைதானம் உள்ளது.இதில் ஸ்கேட்டிங் என்ற சறுக்கு விளையாட்டு தற்பொழுது உதகை மாணவ மாணவர்களிடையே மிகுந்த ஆர்வமான விளையாட்டாக மாறி உள்ளது . எனவே ஸ்கேட்டிங் விளையாட்டிற்கு என உதகை கார்டன் முக்கிய சாலை பகுதியில் அமைந்துள்ள யூத் ஹாஸ்டல் என்ற இடத்தில் தளம் அமைந்துள்ளது .சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக இத்தளத்தில் மாணவ மாணவிகள் மற்றும் உள்ளூர் மக்களும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் தினமும் காலை மாலை என இருவேளையும் இவ் தளத்தை உபயோகித்து வந்தனர்.
தற்பொழுது இந்த மைதானம் எதற்குமே உபயோகம் இல்லாத தளமாக மாறி சமூக விரோதிகளின் மற்றும் குடி மகன்களின் கூடாரமாக மாறி அப்பகுதி சுற்றிலும் குடிமகன்களால் வீசப்பட்ட சரக்கு பாட்டில்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது .மற்றும் அருகே அமைந்துள்ள மரங்களை வெட்டி அருகிலே போடப்பட்டுள்ளதால் மிகவும் மோசமான மைதானத்தை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விளையாட்டு தளத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என் வினோத் குமார். மற்றும் தமிழக குரல் இணைத்தள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment