நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவானது நாளைய தினம் வெகு சீரும் சிறப்புடன் நடைபெற இருக்கின்றது.
இந்த விழாவிற்கு அனைவரையும் வருக வருக வருக என எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாகவும் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய பங்கின் சார்பாகவும் அன்போடு வரவேற்கிறோம்... இந்த விழாவின் சிறப்பு அம்சமாக அன்னையின் ஆலயத்திற்கு முன்பாக எமரால்டு பஜார் பகுதியில் அன்னையின் ஒளி அமைப்பிலான பதாகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையில் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் மும்மதத்தின் குறிகளையும் ஒருசேர அமைத்திருப்பது இந்த பங்கு மக்களின் நல் எண்ணத்தையும் அதே நேரத்தில் எமரால்டு சுற்றுவட்டார பொது மக்களின் ஒற்றுமையும் எடுத்துரைக்கும் வகையில் உள்ளதால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் அன்னையின் பங்கு மக்களையும் விழா குழுவினரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்...
இந்த விழாவானது மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய விழா மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு மும்மதத்தின் குறிகளையும் ஒருசேர அமைத்து நடத்தி வருவது மட்டுமல்லாமல் மும்மதத்தை சார்ந்த மக்களும் ஒரு சேர இந்த விழாவில் கலந்து கொள்வது இந்த விழாவிற்கும் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பங்கு மக்களின் நல் எண்ணத்தையும் எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்களின் நற்குணத்தையும் எடுத்துரைக்கும் வகையில் உள்ளது இது போன்ற விழாக்கள் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் உலகெங்கும் இதேபோன்று எந்த ஒரு மத வேற்றுமையும் இல்லாமல் மத நல்லிணக்கத்தோடு நடைபெற வேண்டுமென தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் அதே நேரத்தில் இந்த விழாவினை இவ்வாறு சிறப்பாக அமைத்தமைக்கு விழா குழுவினருக்கும் பங்கு மக்களுக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment