கோத்தகிரி ஓடேன் ஹட்டியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு J. ராஜூ அவர்கள் இறைவனடி சேர்ந்த நிலையில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அவர்கள் துக்க நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை மற்றும் இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை அதனால் ஊர் மக்கள் மற்றும் கட்சியினர் வருத்தம் தெரிவித்தார்கள் என தமிழக குரல் செய்திவெளியிட்டது.
துக்க செய்தி அறிந்து இன்று (செப்டம்பர் 22) நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆன திரு. L. கணேஷ் அவர்கள் நேரடியாக ஓடேன் திரு.J.ராஜூ அவர்களின் இல்லத்திற்க்கு வருகை புரிந்து அண்ணாரது குடும்பத்தாரை சந்தித்து இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினார்கள். உடன் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. சில்லபாபு மற்றும் துணை தலைவர் திரு. ஓடேன் ரவி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியிட்ட தமிழக குரலுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment