நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் வழிகாட்டுதல் படி, உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். கூட்டத்தில் எதிர்வரும் 26.9.2024 நகர-ஒன்றிய-பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அசார், அபீப் ரகுமான், சந்திரகுமார், அகல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment